ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: 7 ஆண்டுகளாக பதுங்கி இருந்த குற்றவாளி கைது..!

கடந்த 2012 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 2,100 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற வழக்கில் கடந்த ஏழு வருடங்களாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் (NBW) தலைமறைவாக இருந்த மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை பழைய சந்தை கடை பகுதியைச் சேர்ந்த நாசர் @ கட்டை நாசர் என்பவரை கோயம்புத்தூர் மண்டல குடிமை பொருள் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவு பேரில் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் மேனகா மற்றும் உதவியாளர் அர்ஜுன் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மேற்படி நாசர் என்பவரை கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் வைத்து தேடி கண்டுபிடித்து கைது செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 2013, 2014 ஆகிய காலங்களில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு கடத்தியதற்காக சுமார் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.