அவுட்டுக்காய், நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதைப் பொருள் கடத்தல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 46 தனிபடை அமைக்கப்பட்டது . இவர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 4 அவுட்டுக்காய் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் காரமடை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஷெட்டி சிங், ராமராஜ், வேலு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் கஞ்சாவுடன் பிடிபட்ட தாபிஸ் தாஸ் கார்த்திக் சக்திவேல் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 28 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது .இது தவிர தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் மொத்தம் 105 பேர் பிடிபட்டனர்.