கோவை மகளீர் தங்கும் விடுதியில் வருமான வரி அதிகாரியாக நடித்து பணம் மோசடி செய்த பட்டதாரி பெண் கைது..!

கோவை ஆர் எஸ் புரம் சீனிவாசன் ராகவன் வீதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு மதுரை, அண்ணா நகரை சேர்ந்த ராமலட்சுமி (வயது 31 )என்பவர் தங்கினார்.அங்கு தன்னை வருமான வரி துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்த பெண்களிடம் நன்றாக பழகி 2 லேப்டாப் பணம் ரூ 30 ஆயிரம் ஆகியவற்றை மோசடி செய்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். இது குறித்து விடுதி வார்டன் கார்த்திகேயனி ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ராமலட்சுமியை நேற்று கைது செய்தனர். இவர் மீது மோசடி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..