சூலூரில் 28 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளுடன் 3 பேர் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் ,நரசிம்மமாமில் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலையில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 18 கிலோ கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், பருவாய், ஆறுக்குளத்தைச் சேர்ந்த டாபிஸ் தாஸ் (வயது 51) கைது செய்யப்பட்டார். இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இதே போல சூலூர் படகு இல்லம் பூங்கா அருகே நடந்த சோதனையில் கஞ்சா சாக்லெட் விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் சூலூர் சக்திவேல் (வயது 28) கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. இவர்களில் சக்திவேல் டிரைவராகவும் கார்த்திக் எலக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.