கோவை: தர்மபுரியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை கடந்த 6-ந் தேதி பிடித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனத்தில் வனத்துறையினர் விட்டனர். 2 நாட்களுக்கு முன்பு மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது. அதன் பின்னர் வனத்திற்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. கடந்த ...
கோவை: முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 14-ந் தேதி தேதியில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் ...
கோவை : மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் 14 வயது மற்றும் 15 வயது மாணவிகள் .இவர்கள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகி விட்டனர். இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் ...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிறந்து ஒருமாதமே ஆன குழந்தையை நெல்லை தம்பதிக்கு விற்றத் தகவல் அம்பலமானதைத் தொடர்ந்து பெற்றோர், செவிலியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிங்கம்பட்டி ஈஸ்வன் காலணியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது மனைவி பஞ்சவர்ணம்(24) தம்பதிகள் இருவருமே பட்டாசு ஆலை ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். ஏற்கெனவே ...
விழுப்புரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ நிறுவனம், அன்பு ஜோதி ஆசிரமம் என்ற பெயரில் மனநலம் குன்றியவர்கள் காப்பகம் நடத்தி அங்குள்ளவர்களை சித்திரவதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து விதமான சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு பிடிபட்டுள்ளது. வீட்டிலிருந்து மீட்கப்பட்டவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பட்டினியால் வதைக்கப்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. காப்பகம் ...
துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு 20 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு ...
உலக நாடுகள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இதற்கு சுமார் 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். கிருஷ்ணகிரி மாவட்ட இராணுவ வீரர் பிரபு திமுக கவுன்சிலரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சென்னையில் நேற்று தமிழக பாஜக சார்பில் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்த ...
நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் நேற்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தை நேபாளத்தின் பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக புது டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் ...
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு ...