கோவை : மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் 14 வயது மற்றும் 15 வயது மாணவிகள் .இவர்கள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகி விட்டனர். இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் .விசாரணையில் 2 மாணவிகளும் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 14 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது மேட்டுப்பாளையம் காட்டூர் அருண்குமார் ( வயது 20) என்பதும் ,15 வயது மாணவியை காதலிப்பதாக கடத்திச் சென்றது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கே என்.பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 21) என்பதும் தெரிய வந்தது .இதையடுத்து அருண்குமார், அய்யப்பன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி .இவர் கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து முதலாமாண்டு படித்து வருகிறார் .கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி திரும்பி வரவில்லை .இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்து புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் மாணவியை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி சிவனேசன் ( வயது 22)என்பவருடன் சென்றதும், அவர் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவனேசனை நேற்று கைது செய்தனர் .மாணவி மீட்கபட்டு தனியார் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..
Leave a Reply