கோவை: முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 14-ந் தேதி தேதியில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொது பிரிவு, மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் கோவை மாவட்டத்தில் சுமார் 16,000 க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் 2321 பேர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அத்லட்டிக் தலைவர் ஸ்ரீபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply