நேபாளத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு..!

நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் நேற்று  மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தை நேபாளத்தின் பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக புது டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள கட்டிடங்கள் சிறிது நடுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறியிருந்தார். இந்நிலையில் இமயமலையின் அடிவாரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்று இன்னும் கண்டறியப்படவில்லை.