ஜகார்த்தா: ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் பெருந்திரளாக திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி. ஜகர்த்தாவில் பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். ஏசியான் மாநாட்டு நிகழ்வுகளுக்குப் பின் ...

சீனாவின் புதிய வரைபடத்தில் தங்கள் நாட்டுக்குச் சொந்தமான சென்காகு தீவுகள் இடம்பெற்றிருப்பதாக ஜப்பான் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிலிப்பின்ஸ், மலேசியா, வியத்நாம், தைவான் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து சீனாவுக்கான எதிா்ப்புப் பட்டியலில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது. நாட்டின் பிராந்திய எல்லைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதைத் தவிா்க்க, நிகழாண்டுக்கான புதிய தேசிய வரைபடத்தை சீனா கடந்த வாரம் வெளியிட்டது. ...

லண்டன்: ஜி-20 உச்சி மாநாட்டை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. தலைநகர் டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உச்சி ...

திருவாரூர்: சனாதனத்தை எதிர்க்கும் கும்பல் நேற்று பெய்த மழைக்கு வந்த ஈசல்களை போன்றது என்றும் கழுகை போல் நினைத்து உயர பறக்க ஆசைப்பட்டால் சிறகொடிந்து கீழே தான் விழ வேண்டும் எனவும் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்பது ஜாதி, மதங்களை கடந்து பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை ...

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு, குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49) பாஜக கிளைத் தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் ...

கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பல் மருத்துவமனை உள்ளது. அங்குள்ள பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவிகளை யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து பல் மருத்துவர் கார்த்திகேயன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் வழக்கு பதிவு செய்து ...

கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகர், 6 -வது வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நிர்மலா ( வயது 56 ) இவர் நேற்று தனது ஸ்கூட்டருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று இருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் ...

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள டி. வி. எஸ். நகரில் சி.எஸ்.ஐ .கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு 2012 முதல் 2022 வரை வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ரூ 58 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஆலய பொருளாளர் பிரின்ஸ் போஸ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை, குமரன் அவென்யூவை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 24) செட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தம்பி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார் .அதிலிருந்து மனோஜ் குமார் ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 30 கே.வி.திறன் கொண்ட 2 ஜெனரேட்டர்கள் திருட்டு போனது.இதன் மதிப்பு ரூபாய் ரூ.16 லட்சம் இருக்கும் .இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம்,சேர்மாதேவி பக்கம் உள்ள முக்கூடல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் ( வயது 36) ...