சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை தங்களிடம் முதலீடு செய்தால் தலா ஒரு லட்சத்திற்கு மாதாந்திரம் 30 சதவிகிதம் வட்டி ஐந்து சதவிகிதம் கமிஷன் மற்றும் ஒரு கிராம் தங்க காசு பரிசு என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ஏமார்ந்த இளித்த வாய் ...
சென்னை : தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினாரால் கடந்த இரண்டு தினங்களில் ஸ்பெஷல் ரெய்டு நடத்தப்பட்டு மூன்று வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு சுவாமி சிலைகள் 1 திருவாச்சி ஆகியன மீட்கப்பட்டன. திருநெல்வேலி சரகம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை ...
புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. 1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் ...
புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவரை கொண்ட குழு தேர்தல் ஆணையரை ...
டெல்லி: டெல்லி முதல்வரும், “இந்தியா” (INDIA) கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு விடுத்திருக்கிறது. டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ...
2G Case: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகெடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மூத்த தலைவர் கனிமொழியை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் ...
கோவை ஆபராம்பாளையம் 28- வது வார்டு ஷோபா நகர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்தனர். இதுகுறித்து தகவல் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சுப்பே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் உதயகுமார் ( வயது 19) இவர் அங்குள்ள பால் கம்பெனியில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பும் போது 3 பேர் இவரை வழிமறித்து லிப்ட் ...
கோவை சிங்கநல்லூர் ஏ .ஜி. புதூர் ரோட்டில் உள்ள ராம்நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. அவரது மனைவி சந்திரா (வயது 71) வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 ...
கோவை டாடாபாத், ஆறு முக்கு வீதியில் அருள்மிகு அலங்கார மாரியம்மன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் கோவில் பூசாரி முரளி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கோவிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட உண்டியலை காணவில்லை. பணத்துடன் உண்டியலை யாரோ திருடி சென்று விட்டனர் ...













