சமூக வலைத்தளங்களில் மீண்டும் சிறுத்தை புலி உள்ளது என்று பதிவிட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியவருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்…

நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை புலி தாக்கியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது மற்றும் நான்கு வயது சிறுமி காயம் அடைந்துள்ளார் இதனை கண்டித்து தேவாலா உட்கோட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அந்த சிறுத்தைப் புலியை இரண்டு நாட்களுக்கு முன்பு பிடித்து விட்டபோதிலும் மீண்டும் ஒரு சிறுத்தை புலி இருப்பதாகவும் வனப்பகுதிக்குள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாகவும் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் வசித்து வரும் சஜார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தேவையில்லாமல் பொதுமக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் வீடியோக்களை பதிவிட வேண்டாம் என்றும் பொய்யான தகவல்களை பதிவிட கூடாது என்றும் ஒரு பதிவினை பதிவிடும் முன் அதன் உண்மை தன்மையை அறிந்து அதன் பின்னரே பதிவிட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இவரது செயலை பாராட்டி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தரவடிவேல் அவர்கள் இன்று பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார் மேலும் பொய்யான தகவல்களை பரப்பி அவர்கள் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.,