தென்காசி வட்டாரத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி முகாம் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் பயிரிடுவதற்கு ஜீன் – ஆகஸ்டு மாதங்கள் உகந்தது ஆகும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அன்றாட தேவைக்குரிய காய்கறிகள் பயிர் செய்து பயன் பெற வேண்டும் என்ற ...

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகா. இம்மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. அதுவும் காங்கிரஸ்- ...

 ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யமுடியாது என ஜகதீப் தன்கர், மற்றொரு எம்பியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இருக்கை வரை சென்று விவாதித்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மண்டபம் பகுதி மீனவர்கள் நெடுந்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலையில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்.. பாம்புகளை தொந்தரவு செய்யாமல் சாலையில் நின்று வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நந்திமங்கலம் செல்லும் சாலையில் நேற்று இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாம்புகளை தொந்தரவு செய்யாமல் ...

சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்த கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொள்கிறார் என அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தக் கோரி ...

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றக்கூடாது, என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்கள் உருவப்படங்களை வைக்கக் கூடது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. டாக்டர் அம்பேர்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் ...

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சக்தி தங்கவேல் (வயது 23) தனியார் நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் “இன்ஸ்டாகிராம்” மூலம் நட்பு வைத்திருந்தாராம். பின்பு அது காதலாக மாறியது. இந்த நிலையில் சக்தி தங்கவேல் தனது காதலியை ...

கோவை: மதுரை மாவட்டம். பேரையூர் உத்தமபுரத்தைச் சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 83) இவருக்கும் கோவை காந்திபுரம் முதல் வீதியில் வசிக்கும் இவரது பேரன் அழகு மணிக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக சிவில் வழக்கு கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்காக அய்யனார் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ...

கோவை ரேஸ் கோர்சில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்வராஜ்.இவரது மனைவி டாக்டர். ராஜகுமாரி( வயது 53 )இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் .இவர் நேற்று இரவு 8 மணி அளவில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் ரவுண்டானா பகுதியில் ” வாக்கிங்” சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ...