தோட்டக்கலைத் துறையின் ஆடிப்பட்ட காய்கறி முகாம்.!!

தென்காசி வட்டாரத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி முகாம் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

காய்கறிகள் பயிரிடுவதற்கு ஜீன் – ஆகஸ்டு மாதங்கள் உகந்தது ஆகும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அன்றாட தேவைக்குரிய காய்கறிகள் பயிர் செய்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தோட்டக்கலைத் துறையின் டான்ஹோடா விற்பனை மையம் மூலம் காய்கறி விதைதளைகள் ரூ.15/- தளை என்ற விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த தளையில் சுத்தரி, தக்காளி, கீரை,முள்ளங்கி, சீனி அவரை விதைகள் உள்ளன.ஆடிப்பட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவரின்  அறிவுரையின்படியும் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் துவங்கப்பட்டது.

முதல் தளையை தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் புஷ்பம், தென்காசி, மனராள், கடையநல்லுார், சந்திரசேகர், கீழப்பாவூர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் தோட்டக் கலைத் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட தொகுப்பு 50 சதவீத மானிய விலையில் (ரூ.450/-) வழங்கப்படுகிறது. இதில் செடி வளர்ப்பு பைகள் – 6, 2 கிலோ தென்னை நார் கட்டி -6, காய்கறி விதை தளைகள், அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா -200 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி- 200 கிராம், வேப்ப எண்ணெய் மருந்து 100 மிலி, மாடி தோட்ட வளர்ப்புக்கான கையேடு ஆகியவை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற http://www.tnhorticulture.tn.gov.in/kit-new/ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.  மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாலு- 9942674020, மணிகண்டன்- 9080786033, கிருஷ்ணராஜ் – 9600496771 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
என தென்காசி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தங்கம் தெரிவித்தார்.