கோவையில் 6 -வது நாளாக வெடிகுண்டு சோதனை…

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,குடியரசு தின விழாஆகிய நிகழ்வுகளை வைத்து கோவை மாநகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,துப்பறிவு நாய் படைபிரிவினர் 4 பிரிவுகளாக பிரிந்துகோவையில் உள்ள முக்கிய இடங்களான கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் கோவில் தண்டு மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், மத்திய ரயில் நிலையம், வட கோவை ரயில் நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், டவுன் பஸ் நிலையம் மேட்டுப்பாளையம் ரோடு புதிய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம் உக்கடம் பஸ் நிலையம்,வணிக வளாகங்கள், பூ மார்க்கெட், வ உ சி பூங்கா |வாலாங்குளம் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் அதிகமாக கூடக்கூடிய திரையரங்குகள், பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் இரவு பகலாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று 6-வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.