ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்.!!

கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், ஐ எஸ் டி இ நிறுவனத்தின் நிதியுதவியுடன் தேசிய அளவிலான கருத்தரங்கு “பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் நிலையான அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் 25.04.2024 (வியாழக்கிழமை) அன்று கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் செந்தில் குமார் நடராஜன், பேராசிரியர், இயந்திரவியல் துறை, என் ஐ டி, காரைக்கால், மற்றும் மலேசியாவை சேர்ந்த பேராசிரியர் முனைவர் ருதி அதுல் அக்மம் தியாவுதின், யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேசியா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களது சிறப்புரையில் ஏ ஐ தொடக்கம் முதற்கொண்டு எவ்வாறு எந்தெந்த துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது என்றும் இதனால் வருங்காலங்களில் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என்றும் மாணவர்களின் படிப்பின் மூலம் தொழிலநுட்பத்தை மேம்படுத்துவதின் அவசியத்தை அறிவுறுத்தினார்கள்.

மேலும் இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 60 ஆய்வுக் கட்டுரைகள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது. இவர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை துறையின் வல்லுனர்களாக முனைவர். ஆர். மோகன் ராஜ், உதவி பேராசிரியர், ப்ரொடக்சன் இன்ஜினியரிங் துறை, பி எஸ் ஜி, கோவை, முனைவர். எஸ். முரளிதர், பேராசிரியர், மேலாண்மைத்துறை, ஜெயின் டீம்டு யூனிவர்சிட்டி பெங்களூரு , முனைவர் எம். ஐயப்பராஜா, பேராசிரியர், டிஜிட்டல் கம்யூனிகேஷன் துறை, வி ஐ டி, வேலூர். முனைவர் ஆர். ஆனந்த், உதவி பேராசிரியர், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை, அமிர்தா விஸ்வா வித்யபீதம், பெங்களூரு மற்றும் முனைவர். எம். மாரிக்கண்ணன், பேராசிரியர், கணினி பொறியியல் துறை, ஜி சி இ, ஈரோடு ஆகியோர் ஆய்வு செய்து தலைசிறந்த ஆய்வுக் கட்டுரைகளை IJERT என்ற journal நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது.

இக்கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல் அவர்கள் தலைமை தாங்கி வரவேற்றார். கல்லூரியின் டீன் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை) முனைவர். கே. எம். அருண்ராஜா, அவர்கள் இக்கருத்தரங்கின் விவரங்களை எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.