தேசிய பிசியோதெரபி மாநாடு…

PHYSIO TROOPS 2K23 தேசிய பிசியோதெரபி மாநாடு. டிசம்பர் 7 8 9 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .இம் மாநாட்டை கிறிஸ்டியன் காலேஜ் ஆப் பிசியோதெரபி ஏற்பாடு செய்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 2000 பிசியோதெரபி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இம் மாநாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வித்துறை விளையாட்டுத்துறை மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் வெவ்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கோபிசெட்டிபாளையம் ஒத்த குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் பிசியோதெரபி கல்லூரி அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.