மனித – விலங்கு மோதல்: தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வனத்துறை அமைச்சர் உறுதி

மனித – விலங்கு மோதல்: தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – வனத்துறை அமைச்சர் உறுதி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ம.மதிவேந்தன் இன்று ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது சிறுத்தை மற்றும் கரடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரு தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து நிதியுதவி வழங்கி மருத்துவரிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து தொழிலாளரை சிறுத்தை தாக்கிய தேயிலைத் தோட்டம் பகுதியில் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வால்பாறை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மனித வனவிலங்கு மோதலை தடுக்க வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து அப்பகுதி பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்க்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ் நாடு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கருதி தமிழக முதல்வர் தேவையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் டான்டீ நிறுவனத்தை மூடுவதாக இல்லை மேலும் தற்போது நஷ்டத்தில் இயங்கிவரும் நிறுவனத்தை மேம்படுத்தி லாபம் ஈட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இந்த ஆய்வின் போது ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும் கோவை மண்டல வனப்பாதுகாவலருமான இராமசுப்பிரமணியம், உதவி இயக்குநர் பார்க்வ் தேஜா,உதவி வனப்பாதுகாவலர் செல்வம், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேசன், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் பலர் உடனிருந்தனர்