எட்டு பேர் அமரக்கூடிய மோட்டார் படகின் சேவை விரைவில் கோவை உக்கடம் பெரிய குளத்தில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனமாக்கப்பட்ட உக்கடம், பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வ சிந்தாமணி குளத்தின் ஒரு பகுதி ...
சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், விதிமுறைகள் வகுக்கவும் கோரி, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்தது.அதன் தொடர்ச்சியாக, 2016 ...
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 134.4 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4036 கன ...
கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் இவரது மகள் சஜிதா (வயது 15) வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார் .அப்போது சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள குமிட்டி பதி,வழுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 47) தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று ஒத்த கால் மண்டபம்- வேலாந்தவளம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியில் போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன்,சப் இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 50 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .ஆட்டோவும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை ...
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஆண் குதிரை ஒன்று அடையாளம் தெரியான வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சாலை ஓரத்தில் வலியால் துடித்தபடி இருந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து கோவை மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ...
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் சம்பங்காளி. இவரது மகன் பிரதீப் (வயது 21). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலை இல்லாம் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் பிரதீப் கடந்த 1-ந் தேதி வேலை தேடி கோவைக்கு வந்தார். பின்னர் கணபதி சின்னசாமி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ...
கேரளா மாநிலம் அதிரப் பள்ளி வனப்பகுதியில் ஆந்தராக்ஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து செல்லும் நிலையில், நீர் வீழ்ச்சியை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் செத்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் இறந்த பன்றிகளின் ...