கோவை சரவணம்பட்டி பக்கமுள்ள சின்ன மேட்டுப்பாளையம், ஆதி திராவிடர் வீதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன், இவரது மனைவி சரஸ்வதி (வயது 57) இவர் நேற்று தனதுமகன் தங்கமணி ( வயது 33) என்பவருடன் பைக்கில் வாகராயம்பாளையம்- குமாரபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கரிய காளியம்மன் கோவில் அருகில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் சென்ற பைக் மீது மோதியது .இதில் பைக்கில் பின்னால் இருந்து வந்ததாய் சரஸ்வதிஅதே இடத்தில் இறந்தார்.இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக காரமடையை சேர்ந்த லாரி டிரைவர் சாந்த குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply