கோவையில் மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி…

கோவை விளாக்குறிச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 49). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று அவர் கே.கே.புதூர் ரத்தினசபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றார். அங்கு மாசிலாமணி முதல் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக தடுமாறி முதல் மாடியில் இருந்து கீழே விழந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது மனைவி வானதி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து வானதி அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.