கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் :தூக்கு போட்டு எலக்ட்ரீசியன் – டிரைவர் தற்கொலை.!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள ஊஞ்சபாளையம் ,இந்திரா நகரை சேர்ந்தவர் மணி ஆனந்த் (வயது 40) எலக்ட்ரீசியனாகவேலை பார்த்து வந்தார் .இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் சில பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தார். இதனால் இவர் சம்பாதிக்கும் பணம் இவரது செலவுக்கு போதுமானதாக இல்லை..இதனால் மனம் உடைந்த மணி ஆனந்த் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் இந்திராணி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல வடவள்ளி அருகே உள்ள வீரகேரளம், டி.ஜி .நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது38) கால் டாக்சிடிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக காதுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.அதிலும் குணமாகவில்லை .இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த நாகராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ..இதுகுறித்து வடவள்ளி போலீசில் மனைவி ஜோதி புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு லிரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.