திருமணம் செய்த 2 கணவர்களும் இறந்ததால் விரக்தியில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை…

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் சரவணன்.
இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.
பின்னர் கன்னியம்மாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை 2-வது திருமணம் செய்தார். கடந்த 3மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைக்கு இடையே கருத்து வேறுபாடு எற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 கணவர்களும் இறந்ததால் கன்னியம்மாள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கயைில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கன்னியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.