வால்பாறையில் பெய்த கனமழையால் மண்சரிவு: நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை செடிகள் சேதம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்ப்படுத்தியுள்ளது இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள 2 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் மண்சரிவு ஏற்ப்பட்டது . இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை செடிகள் மண்சரிவால் சேதமடைந்தது. இந்நிலையில் இந்த கனத்த மழையால் அக்காமலை எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் உள்ள தங்கம் வேளாங்கண்ணி என்பவரின் குடியிருப்பின் ஒருபகுதி இடிந்து சேதமானது தகவலறிந்த சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று தேவையான துரித நடவடிக்கையை மேற்க் கொண்டுள்ளனர்