கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சி.எம்சி காலனி பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது .அங்குள்ள 700 வீடுகள் இடித்த அகற்றப்பட்டன. மேலும் அங்கு 90 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. அவர்களுக்கும் மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் வீடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. இதைய டுத்து நேற்று தேசிய நெடுஞ்சாலை, மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர் .பின்னர் அவர்கள் அங்குஆக்கிரமிப்பு வீடுகளில குடியிருந்தவர்களை காலி செய்ய வைத்தனர். 40 வீடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்ய வைத்தனர். அந்த வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது .பின்னர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது சி.எம்.சி, காலனியில் மீதமுள்ள 50 வீடுகளும் விரைவில் இடித்த அகற்றப்படும். கரும்புக்கடை பகுதியில் 10 வீடுகள் மற்றும் 5 கடைகள் இடித்து அகற்றபட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Leave a Reply