ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி சீனக் கப்பல் வரவுள்ள சர்ச்சைக்குரிய விசயத்தைக் கண்டித்து இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்தினசார தேரர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், மனிதாபிமான உதவிக்காகவும், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, மேற்கத்தேய உலக நாடுகள் ...
கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். கும்பகோணம் அருகே தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.கடந்த 1971 ஆம் ஆண்டு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி சிலை, நடராஜர் சிலை,கோலு அம்மன் சிலை உட்பட 5 பஞ்ச லோக சிலைகள் திருடப்பட்டது. ...
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக டெல்லிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஆளுநருடனான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஆட்சி மாற்றம் அரசியல் ...
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரில் இருந்து இக்கரை போளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது தென்னமநல்லூர் கிராமம். இந்த ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். இவர்கள் விளைபொருட்களை காலை வேளையில் வரும் பஸ்களில் ஏற்றி உழவர்சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக ...
கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகள் நின்சி ( வயது 23) இவர் கேரளாவை சேர்ந்த ஜெர்சி என்ற வாலிபரை காதலித்து வந்தார் .தனது காதலை பெற்றோர்களிடம் கூறினார் .அவர்கள் இன்னும் ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நின்சி நேற்று அவரது ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள பூலுவபட்டி, உரிப்பள்ளம் புதூரை சேர்ந்தவர் வேலுமணி இவரது மனைவி ராஜாமணி ( வயது 34) இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு ...
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா ( வயது 40 )ஜோதிடர். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிட பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார் .இவர் சென்னை சேர்ந்த கருப்பையா (வயது 45 )என்பவரிடம் இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ. 25 லட்சம் மற்றும் மாங்கல்ய பூஜை நடத்துவதாக கூறி 15 பவுன் ...
மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது . சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று மாலை பூகாக்சாவ் இகாங்க் பகுதியில், ஒரு ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள காளியப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 85) இவர் நேற்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள சுப்பேகவுண்டன் புதூர் சுங்கம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்தலாரிஇவர் மீது மோதியது .இதில் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், லட்சுமணன் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் ( வயது 51 )எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2ஆம் தேதி உப்பிலிபாளையம் ஆண்டாள் நகரில் ஒரு வீட்டில் எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி உடலில் காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் .அங்கு ...












