கோவையில் காதல் தோல்வியால் இளம்பெண் தற்கொலை..

கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகள் நின்சி ( வயது 23) இவர் கேரளாவை சேர்ந்த ஜெர்சி என்ற வாலிபரை காதலித்து வந்தார் .தனது காதலை பெற்றோர்களிடம் கூறினார் .அவர்கள் இன்னும் ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நின்சி நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.