கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா ( வயது 40 )ஜோதிடர். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிட பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார் .இவர் சென்னை சேர்ந்த கருப்பையா (வயது 45 )என்பவரிடம் இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ. 25 லட்சம் மற்றும் மாங்கல்ய பூஜை நடத்துவதாக கூறி 15 பவுன் நகையைப் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் பிரசன்னா அவரது மனைவி அஸ்வினி உட்பட 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அவமானம் தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள பிரசன்னா முடிவு செய்தார். கடந்த 3ஆம் தேதி தனது தாய் கிருஷ்ணகுமாரி மனைவி அஸ்வினி மற்றும் மகள் ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பிரசன்னாவின் தாயார் கிருஷ்ணகுமாரி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரசன்னா மற்றும் அவரது மனைவி அஸ்வினி மகள் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரசன்னா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .தொடர்ந்து மனைவி அஸ்வினி அவரது மகள் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.