ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி சீனக் கப்பல் வரவுள்ள சர்ச்சைக்குரிய விசயத்தைக் கண்டித்து இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்தினசார தேரர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், மனிதாபிமான உதவிக்காகவும், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, மேற்கத்தேய உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிறுவனங்களை இலங்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த வேளையில், சீனக் கப்பலின் வருகை அத்தகைய உதவியை பெறுவதற்கான முயற்சிகளை சீர்குலைக்க வாய்ப்புள்ளது . இதனால் இலங்கையின் நிலைமை மேலும் மோசமாகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.