கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள பூலுவபட்டி, உரிப்பள்ளம் புதூரை சேர்ந்தவர் வேலுமணி இவரது மனைவி ராஜாமணி ( வயது 34) இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வந்ததும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.நேற்று முன் தினம் இருவரும் மது குடித்தனர்.பின்னர் தூங்க சென்று விட்டனர் .நேற்று காலையில் மனைவி ராஜாமணி எழுந்திருக்கவில்லை,கணவர் வேலுமணி எழுப்பிய போது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply