கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வடக்கலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 44) விவசாயி. இவர் நேற்று ஓதிமலை -அன்னூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மொபட் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். ...
கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதே போன்று லாலி ரோடு சிக்னல் பகுதியிலும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. உழவர் சந்தை அருகே சாலை விரிவாக்கத்திற்காக மண்மேடுகள் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையினாலும், சாலை விரிவாகத்திற்காக தோண்டப்பட்டிருந்த குழியாலும் ...
கோவை:வருகிற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.இதை யொட்டி இந்து அமைப்புகள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.பின்னர் இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளங்களில் கரைக்கப்படுகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து கடந்த வாரம் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா ...
கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையருகே நேற்று ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ...
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். கடந்த 2005ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சிகிச்சைக்கு ...
இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் எனப்படும் விமானம் தாங்கிய போர்க் கப்பல் நாட்டிற்கான அர்ப்பணிப்பிற்குத் தயாராகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம். இந்தியாவின் பாதுகாப்புப் படை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை, தரை வழியாக வரும் ஆபத்துக்களை தரைபடையினரும், வான் வழியாக வரும் ஆபத்துக்களை விமானப் படையினரும், கடல் ...
லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ...
லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் கோ-பூஜை செய்து வழிபாடு செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் வேறுவழியின்றி ...
சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் சுரங்கப்பாதையில் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் மின்தடை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மின்சார விளக்குகள் மங்கலாக ஒளிர விட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்லடம் கரடிவாவியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ...













