சாலை தடுப்பு சுவரில் பெயிண்ட் அடித்த 2 பெண் தொழிலாளர்கள் வேன் மோதி பரிதாப பலி..

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் இருந்த பெயிண்ட் அழிந்துவிட்டது. எனவே அங்கு பெயிண்ட் அடித்தல் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி- புளியம்பட்டி ரோட்டில் உள்ள தடுப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பெண்தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக அந்த தொழிலாளர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4பேர் படுகாயம் அடைந்தனர் .அவர்கள் மீது மோதிய வேகத்தில் அந்த வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதை பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவலின் மகாலிங்கபுரம் விரைந்து வந்துவிசாரணை செய்தார்கள். இதில் படுகாயம் அடைந்தவர்கள் அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மயிலாதத்தாள் ( வயது 55) ஈஸ்வரி ( வயது 50 )லட்சுமி (வயது 45) சரஸ்வதி (வயது 60 )என்பது தெரியவந்தது. இவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் .ஈஸ்வரி மயிலாத்தாள் சரஸ்வதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் மயிலாத்தாள், ஈஸ்வரி ஆகியோர் பரிதாபமாக இற்ந்தனர்.