கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மாற்று மதங்கள் குறித்து கோஷங்கள் எழுப்பினால் உடனே கைது-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை..!

கோவை:வருகிற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.இதை யொட்டி இந்து அமைப்புகள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.பின்னர் இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளங்களில் கரைக்கப்படுகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து கடந்த வாரம் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசும்போது:- விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மதங்கள் குறித்து கோஷங்கள் எழுப்பினாலோ, பேசினாலோ அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். சிலைகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரைக்க வேண்டும் என்றும் வழிபாட்டுத்தலம் அருகில் ” ஜமாப்” அடிக்க கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.இந்த கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர்கள் மாதவன் ,சிலம்பரசன், சுகாசினி, கூடுதல் உதவி போலீஸ் கமிஷனர் முருகவேல் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள் பங்கேற்றனர்.