டாஸ்மாக் கடை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு-பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை..!

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையருகே நேற்று ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் அதிக மது போதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.