மாடு முட்டி காவலாளி உயிரிழப்பு

கோவை சின்ன தடாகம் பக்கம் உள்ள வரபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி ( வயது 56 )இவர் பன்னிமடையில் உள்ள ஒரு ஆட்டோ ஒர்க்ஷாப்பில் கடந்த ஒரு மாதமாக காவாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று ரோட்டில் சுற்றி திரிந்த ஒரு மாடு ஒர்க் ஷாப்புக்குள் புகுந்தது.இதை கிருஷ்ணசாமி துரத்தினார். அப்போது அந்த மாடு அவரது வயிற்றில் முட்டி கீழே தள்ளியது. இதில் அவருக்கு பலத்தக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.இதுகுறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது, இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.