கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள கொண்டசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது 18 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 – ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது . இது ...

தமிழக – கேரள எல்லையான மாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அதற்காக வேறு பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அன்னூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ...

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து, மாலையில் 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வரும் ...

உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. உக்ரைனில் மீண்டும் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. முன்னதாக போரில் உக்ரைனில் இருந்து ஆக்கிரமித்த டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் ...

ராமேஸ்வரம்: பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பேருந்தை உள்ளூர் மக்களே மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த பாலத்தில் நின்று கடலின் அழகை ...

கோவை: தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சமூக நலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயா்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், தொடா்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் சமூக நலத்துறையினா் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ...

மேட்டுப்பாளையம்: கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர். வாகனத்தை ...

டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ...

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததாக தகவல். சட்ட விதிகளை மீறினார்கள் என குற்றஞ்சாட்டும் ஒரு தரப்பு. விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பிய நிலையில் வாடகை தாய் மூலம் அவர்கள் ...

வெனிசுலா நாட்டில் பெய்து கனமழை காரணமாக நிலச்சரிவு சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அங்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு ...