கோவையில் கல்லூரி மாணவிகள் திடீர் மாயம் – போலீசார் விசாரணை..!

கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள கொண்டசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது 18 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 – ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது . இது குறித்து அவரது தாயார் ரோஸ்மேரி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

அதே போன்று, கணபதி புதூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் 19 வயது மகள் கோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்த கடந்த 10 – ந் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இதுகுறித்து தாயார் வளர்மதி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை  தேடி வருகிறார்கள்.