நிலக்கோட்டையில் 40 கிராமங்களில் அகில உலகப் பெண்கள் குழந்தை பாதுகாப்பு தினம் அனுசரிப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சுற்றுவட்டார 40 கிராமங்களில் அகில உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து ,சம அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகள் இல்லாத சமூக நிரந்தர தீர்வு காணுதல், குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி குழந்தை திருமணம் இல்லாத சமூகமாக மாற்றுவது ,பெண் குழந்தைகளின் கல்விக்கான முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தல் , பெண்களுக்கு எதிரான குற்றங்களில் துரித விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுத்தல் போன்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சைல்டுவாய்ஸ் இயக்குனர் அண்ணாதுரை தலைமை வகுக்கவும், சைல்டு வாய்ஸ் திட்ட மேலாளர் அருள்ராஜ் முன்னிலை வைக்கவும் , சைல்ட் வாய்ஸ் ஒருங்கிணைப்பாளர் சிவஜோதி ,சாரதா ஜெனிஃபர், இந்துராணி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் ,சிறுமியர் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.