குன்னூர்: குன்னூரில் விடிய விடிய கொட்டிய மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் விழுந்தும், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய பலத்த மழை ...

சமீபத்தில் தவாங் எல்லைப் பகுதியில் நடந்தேறிய இந்திய ராணுவம் – சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, நாட்டின் மேற்கு விமானப் படைகளைத் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சிலிகுரியிலுள்ள பக்தோக்ரா விமானப் படைத்தளத்தை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா – சீனா எல்லையில் மேலும் சில சிறப்பு ...

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் எல்லைப் பகுதியில் சீனா, இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பதற்றத்தைத் தணிக்க இந்தியா எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம், சீன ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி ராணுவத்தைக் குவிப்பது, கட்டுமானங்களை எழுப்பி வருகிறது என்று அமெரிக்காவின் ...

கோவை: தமிழகத்தில் வடகி ழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் அதி தீவிரமாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய,விடிய பெய் தது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் ...

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள தேவரட்டி பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 36) கூலி தொழிலாளி.இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக பெண் பார்க்கும் படலம் நடந்து வந்தது ”ஜாதக பொருத்தம் சரி இல்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த விஜயகுமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29). என்ஜினீயர். இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்தது. நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானர். அதன் மூலம் தான் சேர்த்து வைத்து இருந்த பணத்தை இழந்தார். எப்படியாவது சூதாட்டத்தில் ...

கடந்த சில தினங்களாக கோவையில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல், மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வழக்கத்தைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளது. மேலும் இரு ...

இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். அசாமில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் 3 நாட்கள் பயிலரங்கு குவஹாட்டியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ...

சேலம்: மேட்டூர் அணையின் நீர் வரத்து 7,600 கன‌ அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் கரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .மேட்டூர் அணை உள்ளிட்ட இடங்களீல் மழை பெய்து ...

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சுவுகான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார். அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் ராஜ்நாத்சிங் வீட்டிலேயே இந்த ஆலோசனை நடைபெற்றது. இதற்கிடையே, சீன எல்லையில் இந்திய வீரர்கள் ...