திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகளுடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் ..!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர்.

திருமலையில் உள்ள டீ.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய நடிகர் ரஜினிகாந்த் அதிகாலையில் மகள் ஐஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவர்களை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார்.

பின்னர் வேத பண்டிதர்கள் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 6 வருடங்கள் கழித்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று உள்ள நிலையில் அவருக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்துவிட்டேன் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.