கோவையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழை… வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்- பாதுகாப்பான இடத்துக்கு மக்கள் மாற்றம்..!

கோவை: தமிழகத்தில் வடகி ழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் அதி தீவிரமாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய,விடிய பெய் தது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கோவை மாநகரில் வடகோவை மேம்பாலம், கிக்கானிக் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு மேம்பாலத்தில் உள்ள தரைப்பாலம், அரசு ஆஸ்பத்திரி வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் ராட்ச மோட்டார் பம்ப் உதவியுடன் உடனடியாக வெளியேற்றினர். தொடர்ந்து பெய்த மழையால் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு, ஆத்துப்பாலம், உக்கடம், அவினாசி மேம்பாலம், புரூக்பீல்டு ரோடு, டவுன் ஹால், கடைவீதி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், மருமலை அடிவாரம், பேரூர், ஆலந்துறை, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. கனமழை காரணமாக வறண்டு கிடந்த ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளமாக மழைநீர் ஓடியது.

அட்டுக்கல் சுள்ளி பள்ளத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளநீர் அந்த பகுதியில் உள்ள புத்தூர் புதுக்காலனி, கலிக்கநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். மேலும் பொதுமக்கள் வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் பேரூர் தாசில்தார் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் வெள்ளம் புகுந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்களை மீட்டு மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். தொடர்ந்து இன்று காலை முதல் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.