ரஷ்யாவிற்கு ட்ரோன் விநியோகம்: 12 ஈரான் தொழிலதிபர்களுக்கு இங்கிலாந்து தடை.!

க்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து உதவி வருகின்றன.

மேலும் ரஷ்யா உக்ரைன் மீதான இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களின் மீது அதிநவீன டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு அதிநவீன ட்ரோன்களை ஈரான் வழங்கியுள்ளதாக ஈரான் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஈரான் மற்றும் ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது.

ஆனால் ரஷ்யாவிற்கு டிரோன்களை உற்பத்தி செய்து வழங்கிய ஈரான் தொழிலதிபர்கள் 12 பேர் மீது இங்கிலாந்து பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதலை வழிநடத்தும் ரஷ்யாவின் ராணுவ மூத்த அதிகாரிகள் 12 பேர் மீது பொருளாதார தடைகளை இங்கிலாந்து விதித்துள்ளது.