கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- காணும் பொங்கலை ஒட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளான ,சுங்கம், உக்கடம் , பேரூர் சாலை பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனம் நிறுத்த வசதி மற்றும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ...

பாகிஸ்தானில் கோதுமை மாவை ஏற்றிச் சென்ற டிரக்கை சிலர் துரத்திச் செல்வதைக் காட்டும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களிலும் கால் நடைகளிலும் செல்வோர் கையில் பணத்துடன் மாவுப் பைகளைக் கேட்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கோதுமை மாவின் விலை 15 கிலோவுக்கு ₹2,050 ஆக உயர்ந்துள்ளது.   ...

இன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது வழக்கம். அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் காலையிலேயே கூடுவார்கள். மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத ...

டெல்லியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது. அவர்கள் வரும் மாதங்களில் வலதுசாரி தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உறுப்பினர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜக்ஜித் சிங் மற்றும் நௌஷாத் ஆகியோர் பயங்கரவாத அமைப்பில் “தங்கள் திறனை நிரூபிக்க” ஒருவரை கொன்றதாகவும் அந்த ...

கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில் அருகே நேற்று சுமார் 65 வயது தக்க மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை : திருப்பூர் மாவட்டம் , பூலாங்கிணறு பக்கம் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் சின்ன கஞ்சிமலை. இவரது மகன் செந்தில் (வயது 38) இவர் நேற்று உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கோமங்கலம் ஏரிக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவரது மொபட் மீது மோதியது .இதில் செந்தில் ...

கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் அருகே ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த சிலர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? ...

கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணபால் .இவரது மகன் சானபால் (வயது 21) இவர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த 7-ந்தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவில் இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து இவரது தயார் அனிதா பீளமேடு போலீசில் புகார் ...

கோவை கிளாசிக் டவர் ரோடு வாலாங்குளத்தில் நேற்று பெண் ஒருவர் சடலமாக மிதந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார்? எந்த ஊர் ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அவலாஞ்சியில் நேற்றுமுன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக ...