கோதுமை மாவை ஏற்றிச் சென்ற டிரக்கை துரத்தும் மக்கள்- பாகிஸ்தானில் தலை விரித்தாடும் உணவு பற்றாக்குறை..!

பாகிஸ்தானில் கோதுமை மாவை ஏற்றிச் சென்ற டிரக்கை சிலர் துரத்திச் செல்வதைக் காட்டும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களிலும் கால் நடைகளிலும் செல்வோர் கையில் பணத்துடன் மாவுப் பைகளைக் கேட்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கோதுமை மாவின் விலை 15 கிலோவுக்கு ₹2,050 ஆக உயர்ந்துள்ளது.