வாலாங்குளத்தில் மிதந்து வந்த பெண் சடலம் மீட்பு..!

கோவை கிளாசிக் டவர் ரோடு வாலாங்குளத்தில் நேற்று பெண் ஒருவர் சடலமாக மிதந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் தெரியவில்லை. அவர் கால் இடறி குளத்தில் விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.