கோவை, ஜன.25- நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாளை (26-ந் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கோவையில் வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று காலை மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி ...
கோவை கணபதி மாநகர் எப்.சி.ஐ ரோடு அருகே 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்த அந்த வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள பாலத்துறை ,பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ், இவரது மகன் ஹரிதாஸ் ( வயது 32) )மினி ஆட்டோ ஒட்டி வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த உயரமான முருங்கை மரத்தின் கிளையை நேற்று வெட்டினார் .அப்போது வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகில் இருந்த உயர் மின் அழுத்த ...
கோவை: குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரசாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ...
கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் (வயது73) இவரது மனைவி டாக்டர் பிரிசில்லா ( வயது 73 )இவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்கள். தற்போது தாராபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள்.நேற்று முன்தினம் இரவு தாராபுரம் சென்று விட்டு கோவைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காரை டாக்டர் ...
கோவையில் உள்ள டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் மத்திய சிறை உள்ளது.இந்த சிறையின் நுழைவு வாசல் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார் ?என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து புலியகுளம் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ...
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், திலகர் விதியை சேர்ந்தவர் பிரகாஷ் | கலித்தொழிலாளி. இவரது மகன் தர்ஷித் (வயது 5) இவர்களது வீட்டில் குளிர்பான பாட்டிலில் கரையான் மருந்தை கலக்கி வைத்திருந்தனர்.அதை தர்ஷித் கூல்ட்ரிங்ஸ் என நினைத்து தவறுதலாக குடித்து விட்டான்.அவனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் ...
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் ...
குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 26-ம் தேதி வழக்கம்போல் டெல்லியில் கோலாகலமான கொண்டாட்டம் பிரமாண்ட அணிவகுப்புடன் நடைபெறுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, சமூக விரோத சக்திகள், பயங்கரவாதிகள் மற்றும் இந்திய விரோத ...
சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை நடவடிக்கைக்கு பயந்து வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில், ...













