கோவை சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம் கருவூலூரான் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 44) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதிலிருந்து விடுபடுவதற்காக மது அருந்துவோர் மறுவாழ்வு மையத்தில் 4மாதம் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வந்தார் .வீட்டுக்கு வந்த பிறகு அவரால் ...

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவின்பேரில், மாநகராட்சிப் பகுதியில் அனுதியின்றி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட காந்திபுரம் லாஜாபதிராய் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பதாகைகளை கோவை மத்திய மண்டலத்தின் உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் மற்றும் நகரமைப்பு அலுவலர் ...

கோவை: நகரப் பஸ்களில் மாதம் முழுவதும் விருப்பம் போல பயணிக்க ரூ.1,000 செலுத்தி சலுகை கட்டண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கோவை கோட்ட மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனைத்து நகர பஸ்களிலும் ஒரு மாதம் முழுவதும் எங்கும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறி இறங்கி ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்து விட்டு பேன்சி கடையை கவனித்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்த சேலத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக ...

ஊட்டி: தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும். இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுப்பர். அப்படி வருபவர்களின் முதல் விருப்பம் ஊட்டி தாவிரவியல் பூங்கா. அடுத்த இடத்தில் படகு இல்லம் மற்றும் ரோஜா ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் பிரிவு, தோலம்பாளையம் மத்திய சுற்று, தடாகம் காப்புக்காடு, நீலாம்பதி சரகப் பகுதியில், காப்பு காட்டிற்குள், நேற்று வயதான பெண் யானை இறந்து கிடந்தது. இது வனப் பணியாளர்களின் வழக்கமான ரோந்துப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த வனப் பகுதியைத் தணிக்கை செய்தனர். உடல்கூறாய்வு ...

கோவை அருகே உள்ள இடையர்பாளையம் அன்பு நகர் 2வது விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 55) கூலிதொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி, இடையர்பாளையம் ரோட்டில் காளப்ப நாயக்கன்பாளையம் சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் இவர் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே ...

கோவை: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் விதிமீறல் தொடர்வதால், தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் காணமுடிகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு ...

கோவை நீலாம்பூர் ரோட்டில் ஸ்கூட்டரில் (ஆக்டிவா ) ஒருவர் நின்று கொண்டே நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிச்சென்றார்.இவரை அந்த ரோட்டில் செல்லும் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் “ஹைவே பட்ரோல்” ரோந்து வாகன போலீசார் இவரை எப்படி விட்டு வைத்தனர் என்று தெரியவில்லை. இப்படி ஆபத்தாக ஸ்கூட்டர் ஓட்டுபவர் மீது காவல்துறை நடவடிக்கை ...

கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார். தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார். வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் ...