லைக்கிற்க்காக நின்று கொண்டு ஸ்கூட்டர் ஓட்டிய வாலிபரின் வீடியோ..!

கோவை நீலாம்பூர் ரோட்டில் ஸ்கூட்டரில் (ஆக்டிவா ) ஒருவர் நின்று கொண்டே நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிச்சென்றார்.இவரை அந்த ரோட்டில் செல்லும் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.

தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் “ஹைவே பட்ரோல்” ரோந்து வாகன போலீசார் இவரை எப்படி விட்டு வைத்தனர் என்று தெரியவில்லை. இப்படி ஆபத்தாக ஸ்கூட்டர் ஓட்டுபவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.