கோவை ராமநாதபுரம் சுங்கம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மகன் பரத் குமார் ( வயது 18) 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாயார் இறந்துவிட்டார்.இதனால் மனமுடைந்த பரத்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் .தனது தந்தையிடம் அம்மாவிடம் நான் செல்கிறேன் என்று கூறினாராம். பிறகு தான் அவர் எலி கொல்லி ...
கோவை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காகவும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இன்று கோவைக்கு வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக, கோவை ரேஸ்கோர்சில் உள்ள ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ஜார்ஜ். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு குழந்தை பிறந்து 30 நாட்கள் ஆகிறது. இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் பூர்ணிமா தனது குழந்தையை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு முதுகு தண்டில் ...
கோவை வனச்சரகம் அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை 4 யானைகள் ஒரு குட்டியுடன் கெம்பனூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்தது. அதிகாலை 6 மணிக்கு தோட்ட வேலைக்கு சென்றவர்கள் யானை இருப்பதை கண்டு வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. கதிரேசன் என்பவரது விளைநிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகங்களில் சுமார் 8 பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் ஒவ்வொரு பிரதி மாதமும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல நேற்று வால்பாறை வன சரகதிற்கு உட்பட்ட கவர்க்கல் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமம் மற்றும் மானாம்பள்ளி ...
மனிதர்களுக்கு தொற்றும் பறவை காய்ச்சல் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. பறவைக் காய்ச்சலில் மனித மாறுபாட்டின் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பறவைகளில் இருந்து பாலூட்டும் விலங்குகளுக்கு தொற்று பரவியுள்ள நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுவரை பறவை காய்ச்சல் பறவைகளில் ...
துருக்கியில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை துருக்கி மக்கள் ஆரத்தழுவி முத்தமிடும் படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ...
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியின் கடல் பகுதியில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படுகில் பயணம் செய்து பார்வையிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து, கடல் சீற்றம் காரணமாக ...
இந்தியாவில் முதன் முறையாக SSLV திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் SSLV D1 ராக்கெட்டை விண்ணில் ஏவியது.. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிடப்பட்ட இலக்கில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படவில்லை. இதனால் மேம்படுத்தப்பட்ட SSLV ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் நடமாடுவது வாடிக்கையாகிவிட்டது . இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே உள்ள புதுத் தோட்டம் பத்து ஏக்கர் பகுதியில் உள்ள வால்பாறை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஒரு சிறுத்தைப்புலி அச்சமின்றி ...













