தொழிலில் நஷ்டம் : கோவை வியாபாரி எங்கோ மாயம்..!

கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்பாஸ்( வயது 42 ) பிஏ பட்டதாரி.இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த அப்பாஸ் கடந்த 7-ந்தேதி தனது நண்பர்களின் ஸ்கூட்டரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மனைவி சமீனா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..