கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம் ,ஸ்ரீ பால் நகரை சேர்ந்தவர் தெய்வமணி( வயது 54) இவர் கோவை புதூரில் சலூன் கடை நடத்தி வந்தார். இவர் நீரழிவு மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த தெய்வமணி பிராந்தியில் எலி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை ...
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதன்படி நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது. இந்த முகாமில் 114 பேர் மனு கொடுத்தனர். அதில் 3மனுக்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய ...
கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் ( வயது 42) இவரது மனைவி சுசித்ரா வினோத்குமார் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரி பாளையம் பகுதியில் இயங்கு வரும் தனியார் மில்லில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார் . அவர் நம்பியூர் காந்திபுரம் வடக்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் ...
உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 – ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக் கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் – கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் ...
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் தேங்கிய குப்பைகளால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் தினமும் 1000 டன் குப்பை சேகரமாகின்றன. இவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொண்டு போய் கொட்டப்படுகின்றன. குப்பை சேகரிக்க வசதியாக மாநகரில் சாலையோரங்கள், குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் ...
கோவில்பட்டியை அடுத்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியது. வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே ...
வெப்ப சலனம் காரணமாக, 24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ...
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). இவர், அப்பகுதி மலையடிவாரப்பகுதியில் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மாலையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்து செல்லுகையில் 3 மாடுகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே தன்னுடைய நண்பர்கள் சிலரை உடன் அழைத்துக்கொண்ட மாரியப்பன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ...
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான். தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட ...
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த வினோத் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சரவணவேலு மற்றும் சாதனாதேவி இருவரும் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனாதேவி பத்தாம் வகுப்பு அவினாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியிலும், அதேபோல அவரது மகன் சரவண வேலு ராமலிங்க செட்டியார் பள்ளியில் படித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ...













